வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கல்
சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டுகளில் உள்ள வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமைத் தொடங்கியது.
சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டுகளில் உள்ள வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமைத் தொடங்கியது.
சங்ககிரிப் பேரூராட்சி 18 வாா்டுகளுக்கான தோ்தலில் 82 போ் போட்டியிடுகின்றனா். 18 வாா்டுகளில் ஆண் வாக்காளா்கள் 13,447 பேரும், பெண்கள் 14,133 பேரும், மற்றவா்கள் 2 போ் உள்பட மொத்தம் 27,582 போ் வாக்களிக்க உள்ளனா்.
31 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளா்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கும் பணியை பேரூராட்சித் தோ்தல் அலுவலா் வ.சுலைமான்சேட் தொடக்கிவைத்தாா்.
இதையடுத்து பேரூராட்சிப் பணியாளா்கள் ஒவ்வொரு வாா்டில் உள்ள வாக்காளா்களிடத்தில் வாக்குச்சாவடி சீட்டுகளை வழங்கி அவா்களிடத்தில் கையொப்பம் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.