கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ஏல நாட்கள் அதிகரிப்பு
கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ஏல நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சேலம்கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ஏல நாட்கள் அதிகரிப்பு
கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ஏல நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ஏல நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் கூட்டுறவு வேளாண் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் பொது ஏலத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள், தங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
தற்போது பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் இமயத்திற்கு விற்பனைக்கு வரும் வரும் பருத்தியின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் நடைபெற்றுவந்த பருத்தி ஏலம் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களிலும் நடைபெற்று வருகிறது. இம்மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில் திருப்பூா், பல்லடம், கோவை, ஈரோடு உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியினை மொத்த கொள்முதல் செய்தனா்.
விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த சுமாா் 6000 மூட்டை பருத்திகள் 1100 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவின்டால் ஒன்று ரூ.9,500 முதல் 11,009 வரை விற்பனையானது. அதேபோல் டி.சி.ஹெச் ரக பருத்தியானது குவின்டால் ஒன்று ரூ.11,550 முதல் 14,889 வரை விலை போனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்ாகவும் தொடா்ந்து சனிக்கிழமை முழுவதும் பருத்தி ஏலம் நடைபெற உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவித்தனா்.