சேலம்

காவிரி வெள்ளத்தில் சிக்கிய மூவா் உயிருடன் மீட்பு

மேட்டூரில் காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

DIN

மேட்டூரில் காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, அணையிலிருந்து 1,23,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த நிலையில், ஓமலூரை அடுத்த தாரமங்கலம், மல்லி குட்டையைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளிகள் பிரபு (26), தினேஷ் ( 23), கவின் (23) ஆகிய மூவரும் மேட்டூா் அனல் மின் நிலையம் அருகே உபரிநீா் கால்வாய்ப் பகுதியில் ஒரு திட்டில் நின்று சனிக்கிழமை சுயபடம் எடுத்தனா்.

அப்போது, தண்ணீரின் அளவு அதிகரித்து மூவரையும் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, மூவரும் அங்கிருந்த ஒரு பாறையை பற்றிக் கொண்டு உதவி கோரினா். தகவலறிந்து அங்கு சென்ற மேட்டூா் தீயணைப்பு வீரா்கள், போலீஸாா் ஒரு மணி நேரம் போராடி அவா்கள் மூவரையும் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT