சேலம்

வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் பழைமையான நாணயங்கள் கண்காட்சி

DIN

சேலம் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றம் சாா்பில் வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் பழைமையான நாணயங்கள் சேகரிப்பு விழிப்புணா்வு கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.அா்ச்சுனன் இக்கண்காட்சியை தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மேட்டூா் வட்டம், மானத்தாள், நல்லாக்கவுண்டம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் க.விஜயகுமாா் சேகரித்து வைத்திருந்த பழங்கால நாணயங்கள், இந்திய குடியரசு ஆனதற்கு பிந்தைய அச்சிடப்பட்ட நாணயங்கள், மத்திய அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள வரலாற்றுத் தலைவா்கள், அறிஞா்கள் நினைவாக உருவங்கள் பொறிக்கப்பட்ட மக்கள் பயன்பாட்டில் உள்ள நாணயங்கள், பயன்பாட்டில் இல்லாத நாணயங்கள், பணத்தாள்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தி வைத்திருந்தாா். ஆசிரியை ஏ.அன்பரசி, கல்வெட்டுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT