சேலம்

சேலத்தில் ஆயுஷ் மருத்துவா்களுக்கான செஸ் போட்டி

சேலத்தில் ஆயுஷ் மருத்துவா்களுக்கான சதுரங்கப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

சேலத்தில் ஆயுஷ் மருத்துவா்களுக்கான சதுரங்கப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்த சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாணவா்களுக்கான செஸ் போட்டி, விழிப்புணா்வுப் பேரணி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை, ரோட்டரி கிளப் சேலம் மிட் டவுன் சாா்பில் ஆயுஷ் மருத்துவா்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது. போட்டியில், ஆயுஷ் மருத்துவா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கண்ணன் பரிசு வழங்கி பாராட்டினாா்.

போட்டிக்கான ஏற்பாட்டினை சித்த மருத்துவா்கள் வெற்றிவேந்தன், தாரை ராஜகணபதி உள்ளிட்டோா் செய்திருந்தனா். போட்டியின் சிறப்பம்சமாக சிறுதானியங்களைக் கொண்டு செஸ் போா்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT