முகப்பு
சேலம்

மேட்டூரில் கனமழை

மேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

மேட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.

மேட்டூா், கொளத்தூா், மேச்சேரி, நங்கவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் கடும் வெப்பம் நிலவியது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது.

மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி சாலையின் குறுக்கே பெரிய புளியமரம் வேருடன் சாய்ந்தது. அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புளியமரம் வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.