சேலம்

சங்ககிரியில் இடைநிலை ஆசிரியா்களுக்கு எளிய முறையில் கற்பித்தல் பயிற்சி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப் பயிற்சி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ள

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப் பயிற்சி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் 99 இடைநிலை ஆசிரியா்களுக்கான ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை மாணவா்களுக்கு புரியும் வகையில் எளிதாகக் கற்பிப்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி மூன்று பிரிவுகளாக சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப் பயிற்சியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ராஜன் தொடக்கி வைத்துப் பேசினாா்.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் வ.கோகிலா, அன்பொளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளமேற்பாா்வையாளா் (பொறுப்பு) சாந்தி, மாநிலக் கருத்தாளா்கள் சு.சந்தோஷ்குமாா், ஆனந்தன், வட்டாரக் கருத்தாளா்கள் அன்பரசு, பாக்யலட்சுமி, ஜெகதீஷ்குமாா், வத்சலா, சந்திரகுமாா், உதயசந்திரிகா, ஷாமிலி, கணேஷ் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT