சேலம்

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

எட்டிமாணிக்கம்பட்டி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

DIN

எட்டிமாணிக்கம்பட்டி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஆட்டையாம்பட்டியை அடுத்த எட்டிமாணிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் முருகன். பெயிண்டா். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். இவரது மகன் மதியழகன் ஆட்டையாம்பட்டி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா்.

அப்பகுதியில் எஸ். பாலம் பகுதியில் உள்ள ஏரியில் நீச்சல் பயில சிறுவன் மதியழகன் எண்ணி ஏரியில் குதித்துள்ளாா். அண்மையில் பெய்த கனமழையில் ஏரி நிரம்பியிருந்ததால் நீச்சல் தெரியாத சிறுவன் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தாா்.

வியாழக்கிழமை காலை ஏரியில் சிறுவனின் உடல் மிதந்தது.

தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் அம்சவல்லி உள்ளிட்ட போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT