எடப்பாடி: எடப்பாடி நகரப் பகுதியில் புதிய சாலை அமைக்க எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி நகராட்சி பகுதியில் புதிய காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை அன்று காலை நடைபெற்றது. எடப்பாடி நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட மூப்பனூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதியில் புதிய காங்கிரீட் சாலை அமைத்திட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, அத்தொகுதியின் உறுப்பினரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதையும் படிக்க: அமர்நாத் யாத்திரை தொடக்கம்: துணைநிலை ஆளுநர் வழிபாடு
புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் நகர்மன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம். முருகன், முன்னாள் நகர மன்ற தலைவர் டி. கதிரேசன் மற்றும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.