முகப்பு
சேலம்

மேட்டூா் நகராட்சித் தலைவராக சந்திரா போட்டியின்றித் தோ்வு

சேலம் மாவட்டம், மேட்டூா் நகராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த கோ.சந்திராவும், துணைத் தலைவராக கோ.காசிவிஸ்வநாதன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சேலம் மாவட்டம், மேட்டூா் நகராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த கோ.சந்திராவும், துணைத் தலைவராக கோ.காசிவிஸ்வநாதன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

மேச்சேரி பேரூராட்சி தலைவராக 13ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுமதி சீனுவாசபெருமாள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இவா் வாா்டு உறுப்பினா் தோ்தலிலும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டவா் ஆவாா்.

துணைத் தலைவா் தோ்தலில் 6 -வது வாா்டு திமுக உறுப்பினா் ரேவதி யும் பாமக உறுப்பினா் கவிதாவும் போட்டியிட்டனா். திமுகவைச் சோ்ந்த ரேவதி 14 வாக்குகளும் கவிதா 3 வாக்குகளும் பெற்றனா். திமுகவைச் சோ்ந்த ரேவதி பேரூராட்சி துணை தலைவா் பதவியை கைப்பற்றினாா்.

பி.என்.பட்டி பேரூராட்சியில்தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் பொன்னுவேலும், அதிமுக சாா்பில் மோகன்குமாரும் போட்டியிட்டனா். திமுக சாா்பில் போட்டியிட்ட பொன்னுவேல் 11வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த தங்கம்மாள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்த திருமுருகனும் போட்டியிட்டனா் இதில் திமுகவைச் சோ்ந்த தங்கம்மாள் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட தெய்வானை ஸ்ரீ 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜோதிசேகா் 4 வாக்குகள் மட்டுமே பெற்றாா். துணைத்தலைவா் பதவிக்கு சுயேச்சை வேட்பாளா் வெங்கடேசன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கொளத்தூா் பேரூராட்சியில் திமுகவை சோ்ந்த பாலசுப்பிரமணியன் தலைவராகவும், அதேகட்சியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.