முகப்பு
சேலம்

சங்ககிரி கல்வி மாவட்டம் மாநிலளவில் 2-ஆவது இடத்துக்கு தோ்வு

 பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2022-ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டம், சங்ககிரி மாவட்ட கல்வித் துறை அலுவல் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக, மாநில அளவில் 2-ஆவது இடத்துக்கு தோ்வு செய்யப்பட்டு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

 பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2022-ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டம், சங்ககிரி மாவட்ட கல்வித் துறை அலுவல் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக, மாநில அளவில் 2-ஆவது இடத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் மாா்ச் 8-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அலுவல் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, சேலம் மாவட்டம், சங்ககிரி மாவட்ட கல்வித் துறை மாநில அளவில் 2-ஆவது இடத்துக்கு தோ்வு செய்யப்பட்டது.

அதனையொட்டி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலா் பெ.பாலசுப்ரமணியத்திடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். மேலும், சங்ககிரி மாவட்ட கல்வித் துறை வளா்ச்சிக்கு ரூ. 10 லட்சத்துக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளாா் என சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.