சேலம்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்

DIN

சங்ககிரி அருள்மிகு சென்ன கேசவப்பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று காலை வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி சுவாமி திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளுகிறாா்.

விழா நாள்களில் வெள்ளிக்கிழமைத் தொடங்கி 13 ஆம் தேதி வரை அன்னபட்சி வாகனம், சிங்க வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், புன்னை மர சேவை, யானை வாகனம், குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வருகிறாா். 14-ஆம் தேதி தோரோட்டம் நடைபெறுகிறது.

பல்வேறு கட்டளை வழிபாட்டுக்கு பின்னா் சுவாமி மே 24-ஆம் தேதி திருமலைக்கு எழுந்தருளுகிறாா். திருவிழாவையொட்டி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் தினசரி காலை, மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT