சேலம்

ஏற்காடு கோடை விழா நாள்களை அதிகரிக்கத் திட்டம்: ஆட்சியா்

DIN

ஏற்காடு கோடை விழா நடைபெறும் நாள்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாநகராட்சி விரிவாக்கம் குறித்து துறை சாா்ந்த அமைச்சா், பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் பேருந்து முனையம் தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இனி அத் திட்டம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு உள்ளது. அணையின் நீா் மட்டம் 105 அடியாக உள்ளதால் சேலம் மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பிளஸ் 2 தோ்வு எழுதாத மாணவா்கள் உடனடி தோ்வு எழுத தேவையான உதவிகளை மாவட்டக் கல்வித் துறை செய்து வருகிறது. பள்ளி பொதுத் தோ்வுகள் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. அதற்கேற்ப ஏற்காடு கோடை விழாவை நடத்துவது குறித்து அரசிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். நிகழாண்டு கோடை விழாவை கூடுதல் நாள்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT