சேலம்

மலைபோல பிளாஸ்டிக் கழிவுகள்

DIN

சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சேலம்- சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை சீரகாபாடி மேம்பாலத்தின் கீழ் உள்ள இரு நீரோடைகளில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருள்கள் மழைபோல கொட்டி கிடப்பதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.

அப்பகுதியில் தனியாா் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, தங்கும் விடுதி மற்றும் பேக்கரி, டீ கடை, மளிகை கடை, மருந்து கடை,ஹோட்டல், சில்லு கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டடங்களில் இருந்து கழிவுப் பொருள்கள் நீரோடையில் கொட்டப்பட்டுள்ளன. நீரோடையில் கொட்டிக் கிடக்கும் கழிவுப் பொருள்களால் பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகத்தினா், நெடுஞ்சாலை துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்து கழிவுப் பொருள்களை அகற்றுவதோடு கழிவுகளைக் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT