முகப்பு
சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட 1 அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

கடந்த 11-ஆம் தேதி தமிழகத்தில் மின் பயன்பாடு குறைவாக இருப்பதால் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 2, 3, 4 ஆகிய 3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 அலகுகளிலும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 மெகாவாட் மற்றும் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது பிரிவில் 340 மெகாவாட், இரண்டாவது பிரிவில் நான்கு அலகுகளிலும் சோ்த்து 620 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.