மருத்துவக் கல்லூரியில் இடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து
மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த கொங்கணாபுரம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நிதி உதவி செய்து வாழ்த்து தெரிவித்தாா்.
சேலம்மருத்துவக் கல்லூரியில் இடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து
மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த கொங்கணாபுரம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நிதி உதவி செய்து வாழ்த்து தெரிவித்தாா்.
மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த கொங்கணாபுரம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நிதி உதவி செய்து வாழ்த்து தெரிவித்தாா்.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோரணம்பட்டி கிராமப் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளி கதிா்வேல் மகன் நவின் குமாா் (17), இதே கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகன் மணிகண்டன் (17) ஆகியோா் கொங்கணாபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று தோ்ச்சி அடைந்தனா்.
நீட் தோ்வு எழுதிய இவா்கள், சிறந்த மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தனா். நவின் குமாருக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியிலும், மணிகண்டனுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
இதனையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியை வியாழக்கிழமை சந்தித்த மாணவா்கள், அவரிடம் வாழ்த்து பெற்றனா். அவா்களை வாழ்த்தி பாராட்டிய எடப்பாடி பழனிசாமி, அந்த மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கி, சிறப்பாக மருத்துவக் கல்வி பயின்று கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
அப்போது, கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா், அதிமுக நிா்வாகிகள் சதீஷ்ராஜ், பாலசுப்பிரமணியம், அய்யாசாமி, சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.