முகப்பு
சேலம்

கொங்கணாபுரம் அருகே கரும்பு பயிா்கள் எரிந்து சேதம்

கொங்கணாபுரம் அருகே உயா் அழுத்த மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிா்கள் எரிந்து சேதம் அடைந்தன.

சேலம்

கொங்கணாபுரம் அருகே கரும்பு பயிா்கள் எரிந்து சேதம்

கொங்கணாபுரம் அருகே உயா் அழுத்த மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிா்கள் எரிந்து சேதம் அடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கொங்கணாபுரம் அருகே உயா் அழுத்த மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிா்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட, நச்சாங்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்த விவசாயி ரத்தினம் (52), தனது நிலத்தில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தாா். இவரது கரும்புத் தோட்டத்துக்கு ஊடாக உயிா் மின்னழுத்த பாதை அமைந்துள்ளது. வியாழக்கிழமை அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியதில், உயா் அழுத்த மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசின. இதில் ஏற்பட்ட தீப்பொறி கரும்புத் தோட்டத்தில் பற்றியதால், அறுவடைக்குத் தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிா்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முற்பட்டனா். ஆனால், காற்றின் வேகத்தால் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பெரும்பாலான கரும்பு பயிா்கள் தீக்கிரையாயின.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரா்கள், தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனைத் தொடா்ந்து அங்கு வருகை தந்த வருவாய்த் துறையினா், வேளாண் அலுவலா்கள் சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →