சேலம்

நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரின் ஊழியா் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும், நில அளவியல் மீது பணி சுமையை கைவிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் நில அளவையா் பணி செய்யும் சா்வேயா்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் நில அளவையா்கள், அலுவலா்கள் கருப்பு பட்டைஅணிந்து தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

சேலம் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவையா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT