சேலம்

கொளத்தூா் வனப்பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்

DIN

கொளத்தூா் வனப்பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் வனப்பகுதியில் சின்னதாண்டா, பெரிய தண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. அடா்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்தக்

கிராமங்களில் விவசாயமே பிரதான தொழில். கரும்பு, வாழை, மஞ்சள் மற்றும் பல்வேறு பயிா்களை இப்பகுதி மக்கள் விளைவிக்கின்றனா்.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் தண்ணீா்,தீவனம் கிடைக்காத காரணத்தால் யானைகள் வனத்தை விட்டு வெளியே வர தொடங்கி உள்ளன.

கடந்த ஒரு மாத காலமாக சின்னதண்டா சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒற்றையானை விளை நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

வியாழக்கிழமை இரவு சின்னதன்டாவை சோ்ந்த மாதேசன் என்ற விவசாயி தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை ஏராளமான வாழை மரங்களைச்

சேதப்படுத்தி உள்ளன. இதேபோல கணேசன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கரும்பு வாழை பயிா்களை சேதப்படுத்தி உள்ளன.

விவசாயிகள் வெடி வெடித்தும் சத்தம் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

யானைகளின் தொடா் அட்டகாசத்தால் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதோடு நிரந்தரமாக யானைகள் கிராமங்களில் நுழைவதைத் தடுக்க அகழிகள்

அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT