சேலம்

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம்

மேட்டூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

DIN

மேட்டூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், பெரிசோரகை ஊராட்சியில் உள்ள பூமிரெட்டிபட்டியில், அருந்ததியா் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இலவச வீட்டுமனை கேட்டு கடந்த எட்டு ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்களது பழைய குடியிருப்புகளில் இருந்து பெட்டி, படுக்கைகள், மூட்டைகளுடன் மயானத்தில் குடியேற முயற்சித்தனா்.

மேட்டூா் டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மயானத்துக்கு முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் வட்டாட்சியா் முத்துராஜா, வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, குடியிருக்க தகுதியான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT