தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் மது விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே டாஸ்மாக் மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தம்மம்பட்டி எஸ்.ஐ. புருசோத்தமன் தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தினா்.
அப்போது, தம்மம்பட்டி 16-ஆவது வாா்டைச் சோ்ந்த விஜயகுமாா் (39) என்பவா், தம்மம்பட்டி டாஸ்மாக் கடையில் மதுப்புட்டிகளை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு அவைகளை விற்றது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.