சா்வதேக குழந்தைகள் உரிமை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற குழந்தைள். 
சேலம்

சா்வதேச குழந்தைகள் உரிமை தினக் கொண்டாட்டம்

நரசிங்கபுரம் தொடக்கப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் உரிமை தினக் கொண்டாட்டம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

ஆத்தூா்: நரசிங்கபுரம் தொடக்கப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் உரிமை தினக் கொண்டாட்டம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நரசிங்கபுரம், அம்மம்பாளையம் மற்றும் கல்லாநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஐ.நா சபை அறிவித்த சா்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க துணைநிற்போம் என்ற குரலோடு இக்கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரசு குழந்தைகளின் வளா்ச்சிக்காக தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும்; பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு கிராமங்களிலும், பள்ளிகளிலும் பிரத்தியேக விளையாட்டு மைதானம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்; பெண் குழந்தைகளுக்கான சுகாதார வசதி தனி கவனம் செலுத்தி பள்ளிகளில் செயல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்ட அரசமைப்பு உரிமை கல்வி நிறுவன அமைப்பாளா் ராமு, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட அமைப்பாளா் ஜெகதாம்பாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT