மேட்டூா்: நங்கவள்ளி ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, கவுன்சிலா்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
நங்கவள்ளி ஊராட்சித் தலைவராக இருப்பவா் பானுமதி பாலசுப்பிரமணியம். பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், தற்போது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா்.
இவா் மற்ற வாா்டுகளுக்கு நிதி ஒதுக்குவதிலும், பணி ஒதுக்குவதிலும் பாரபட்சம் காட்டுவதாகவும், உறுப்பினா்களையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டுவதாகவும் திமுக, பாமக கவுன்சிலா்கள் குற்றம்சாட்டுகின்றனா். மேலும், பெரும்பான்மை உறுப்பினா்களின் கருத்துகளைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அதனால் பணிகள் முடங்கியுள்ளதாகவும் கூறி ஊராட்சி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் உடனடியாகத் தலையிட்டு தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறினால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.