சேலம்: தாட்கோ மூலம் கடனுதவி பெற்றவா்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோா் நிதி வளா்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளா் நிதி (ம) வளா்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டுவரை கடன் உதவி பெற்ற சேலம் மாவட்ட பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளா்களால் வழங்கப்படும்.
இத்திட்டம் டிச. 31-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் பிரதான சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0427-2280348 மற்றும் 94450 29473 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.