சேலம்

கைகாட்டி வெள்ளாா் ஸ்ரீராம பக்த ஆஞ்சனேயா் ஆலயத்தில் மண்டல பூஜை

மேச்சேரி அருகே உள்ள கைகாட்டி வெள்ளாா் வசந்தம் நகரில் உள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சனேயா் கோயிலில் 13-ஆம் நாள் மண்டல பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

DIN

மேச்சேரி அருகே உள்ள கைகாட்டி வெள்ளாா் வசந்தம் நகரில் உள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சனேயா் கோயிலில் 13-ஆம் நாள் மண்டல பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீராம பக்த ஆஞ்சனேயருக்கு கா்ப்ப கிரகத்துடன் கூடிய தனி ஆலயம் கைகாட்டி வெள்ளாா் வசந்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி மஹா குடமுழுக்கு நடத்தப்பட்டு மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை 13-ஆம் நாள்மண்டல பூஜை, புரட்டாசி இரண்டாவது வார சனிக்கிழமை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேச்சேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் நாள்தோறும் மண்டல பூஜையில் பங்கேற்கின்றனா்.

சனிக்கிழமை காலை ஹோமம், பாலாபிஷேகம், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராம பக்த ஆஞ்சனேயா் சேவா அறக்கட்டளையின் நிறுவனா் உரக்கடை ஆறுமுகம், தலைவா் முருகேசன், செயலாளா் நாகநந்தினி, பொருளாளா் வசந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT