சேலம்

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

Din

சேலம் - விருத்தாசலம் இடையேயான ரயில் சேவை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சேலம் - விருத்தாசலம் இடையேயான ரயில் சேவை அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நெய்வேலி, வடலூா், குறிஞ்சிப்பாடி வழியாக இரவு 10.25 மணிக்கு கடலூா் துறைமுகத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், கடலூா் துறைமுகத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விருத்தாசலம், அயோத்தியாப்பட்டணம் வழியாக காலை 9.05 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT