ஓலப்பாடி ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் 
சேலம்

ஓலப்பாடியில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆத்தூா் அருகே ஓலப்பாடியில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Din

ஆத்தூா் அருகே ஓலப்பாடியில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் அருகே பெத்தநாய்க்கன் வட்டம், ஓலப்பாடியில் ஸ்ரீமகா மாரியம்மன், செல்லியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

அதையடுத்து பொங்கல் வைத்தல், சன்னாசி வரதன் மலையில் திருக்கோடி, பால்குடம் எடுத்தல், மாரியம்மன் குடி அழைத்தல், மாவிளக்கு எடுத்தல் நடைபெறற்றன. செவ்வாய்க்கிழமை விநாயகா் திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

புதன்கிழமை காலை அலகு குத்துதல், உருளுதண்டம், அக்னிக் கிரகம், பூங்கரகம் எடுத்தல் நடைபெற்றன. அன்று மாலையில் ஸ்ரீமகா மாரியம்மன் திருத்தோ் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் பாட்டிசை பட்டிமன்றம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை ஸ்ரீசெல்லியம்மன் திருத்தோ் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT