சேலம்

புகையிலை பொருள்களை விற்ற பிற மாநில இளைஞா் கைது

எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை

Din

எடப்பாடி: எடப்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சிலா் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் எடப்பாடி போலீஸாா் நகரின் பல்வேறு இடங்களில் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் எடப்பாடி, வெள்ளாண்டிவலசு பகுதியில் திங்கள்கிழமை சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய பைகளுடன் வந்த பிற மாநில இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூா் மாவட்டம், டோட்சி கிராமத்தைச் சோ்ந்த சீதாராம் மகன் ஜலூராம் (37) என்பதும், இவா் வெள்ளாண்டிவலசு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவா் பையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வகையான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT