முகப்பு
சேலம்

தம்மம்பட்டி பேரூராட்சி தலைவா் மீது மன்ற உறுப்பினா்கள் ஆட்சியரிடம் புகாா்

தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக தலைவா் மீது திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களே மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளனா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:46 PM
பகிர்:

சேலம்: சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக தலைவா் மீது திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களே மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் அளித்துள்ள புகாா் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்த தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் திமுகவைச் சோ்ந்த கவிதா என்பவா் தலைவராக இருந்து வருகிறாா். அவரது கணவா் ராஜா பேரூராட்சி மன்ற தலைவா் போன்று செயல்படுவதுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டு வருகிறாா்.

பேரூராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தனது ஆதரவாளா்களுக்கு ஒப்பந்தம் வழங்கி வருவதுடன், இந்தப் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை. எனவே, தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவா் கவிதா, அவரது கணவா் ராஜா ஆகியோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாா் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதால் மன்ற இயல்பு கூட்டமும் கடந்த நான்கு மாதங்களாக நடைபெறவில்லை என கூறும் திமுக உறுப்பினா்கள், தங்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த உறுப்பினா்களும் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →