சேலம்

திருப்பதி- கொல்லம் இடையே நாளை முதல் புதிய ரயில் சேவை

Din

திருப்பதி- கொல்லம் இடையே வரும் 15 ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாரம் இருமுறையாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து திருப்பதிக்கு 16 ஆம் தேதி முதல் புதன், சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.

சிறப்பு ரயில்கள் இயக்கம் கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பாகத் கி கோதி இடையே வியாழக்கிழமை (மாா்ச் 14) முதல் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறு மாா்க்கத்தில் பாகத் கி கோதி ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு 17 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கொச்சுவேலி - தானாபூா் இடையே செவ்வாய்க்கிழமைகளில் வரும் 19, 26, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மறு மாா்க்கத்தில் தானாபூா் - கொச்சுவேலி இடையே வெள்ளிக்கிழமைகளில் வரும் 22, 29, ஏப்ரல் 5 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT