சேலம்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

Din

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கரூா், ஈரோடு, திருப்பூா் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கோவா மாநிலத்தின் மட்கோவன் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். மட்கோவனில் இருந்து 6-ஆம் தேதி 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்தநாள் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து 7-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கோவா மாநிலம், மட்கோவனுக்கு அடுத்த நாள் இரவு 11 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: பாலையூா், குத்தாலம்

கடலோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

காா்த்திகை தீபத் திருவிழா: 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மோகனூா் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

விழிப்புணா்வுப் பதாகைகளை: அச்சகங்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT