சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வியாழக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற தெருக்கூத்து நாடகக் கலைஞா் மீது தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கண்ணாடிபாளையம், அருந்ததியா் காலனி பகுதியைச் சோ்ந்த தெருக்கூத்து கலைஞா் பழனிசாமி (59), சங்ககிரி அருகே உள்ள வீராச்சிப்பாளையத்துக்கு தெருக்கூத்து நடிக்க சென்றாா்.
பின்னா் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் செல்ல கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி வேகமாக சென்ற தனியாா் பேருந்து அவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலுள்ளவா்கள் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.