முகப்பு
சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2-ஆவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:42 PM
பகிர்:

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால் வியாழக்கிழமை இரவு முதல் மீண்டும் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →