முகப்பு
வணிகம்

காற்றாலை மின் திட்டத்தில் ரூ. 1,736 கோடி முதலீடு செய்யும் கெயில்!

காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதில் கெயில் இந்தியா லிமிடெட் ரூ.1,736.25 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2026, 6:37 pm IST
GAIL reports record profits in FY25, recommends Rs 1 final dividend
பகிர்:

புதுதில்லி: மகாராஷ்டிரத்தில் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதில் மத்திய அரசுக்குச் சொந்த நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட் ரூ.1,736.25 கோடியை முதலீடு செய்ய உள்ளது. 2035ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை, இலக்காகக் கொண்டு விரிவுபடுத்த உள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அதன் கூட்டத்தில், 178.2 மெகாவாட் மின் காற்றாலை உற்பத்தித் திறனை அமைப்பதற்கான முதலீட்டை கெயில் வாரியம் அங்கீகரித்துள்ளது.

ஒப்பந்தம் வழங்கப்பட்டதிலிருந்து, 24 மாதங்களில் முடிக்கப்படும் இந்தத் திட்டம், தற்போதுள்ள 117.95 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் இது இணைக்கப்படும். இது தவிர, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் முழுவதும் 27 மெகாவாட் சூரிய ஆற்றல் திட்டங்களும் தன்வசம் கொண்டுள்ளது கொயில்.

Advertisement

Advertisement

காற்றாலை மின் திட்டங்கள் வாயிலாக கெயில், குஜராத்தில் (19.2 மெகாவாட்), கர்நாடகாவில் (38.1 மெகாவாட்) மற்றும் தமிழ்நாடு (60.65 மெகாவாட்) செயல்படுத்தி உள்ளது.

காற்றாலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், புதுப்பிக்கத்தக்க திறனை அதிகரிப்பதற்கும், அதே வேளையில், 2035ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைவதற்கும் இது ஒரு சிறந்த முயற்சியாகும்.

2035 ஆம் ஆண்டுக்குள் ஸ்கோப்-1 மற்றும் ஸ்கோப்-2 கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலமும், 2040 ஆம் ஆண்டுக்குள் ஸ்கோப்-3 உமிழ்வைக் குறைப்பதன் மூலமும் நிகர பூஜ்ஜியத்தை அடைய கெயில் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனிடையில், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பயோகேஸ் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சுத்தமான ஆற்றலிலும் கெயில் முதலீடு செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.