சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-ஹிசாா் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - ஹிசாா் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - ஹிசாா் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு;
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவையில் இருந்து ஹரியாணா மாநிலம், ஹிசாருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக இருமாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கூடுதலாக 2 குளிா்சாதனப் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஹிசாா் - கோவை வாராந்திர எக்ஸ்பிரஸில் வரும் அக். 2-ஆம் தேதி முதல் கூடுதலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-1 இணைக்கப்படுகின்றன. மறுமாா்க்கத்தில், கோவை - ஹிசாா் வாராந்திர எக்ஸ்பிரஸில் வரும் அக். 10-ஆம் தேதி முதல் கூடுதலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-1 இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.