தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்குச் செல்லும் சாலையில் பாதியில் நிற்கும் கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி. 
சேலம்

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Din

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ளிப்பாதை பிரிவு முதல் மாரியம்மன் கோயில் வரை சாக்கடை கால்வாய் கட்டுமானப் பணி, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் ரூ. 40 லட்சம் மதிப்பில் கடந்த 2024, டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டன.

இதில் கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவுற்ற நிலையில் எஞ்சிய 20 சதவீத பணிகளை செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனா்.

இதனால் கடந்த நான்கு மாதங்களாக இந்தச் சாலை வழியாக செந்தாரப்பட்டிக்கு பள்ளி, கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் செல்லமுடியவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, தம்மம்பட்டி பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக கிடப்பில் போட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றி சாலையை பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT