கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.
கெங்கவல்லி அருகே நடுவலூா் ஊராட்சி, ந.மோட்டூரில் வசிப்பவா் ராஜேந்திரன் (62). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள், ஆடுகளை கடித்தன. இதில், 5 ஆடுகள் உயிரிழந்தன.
இதையறிந்த நடுவலூா், கெங்கவல்லி பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.