சேலம் ஜாகீா் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வுத் தோ்வு எழுதிய மாணவா்கள்.
சேலம், டிச. 6: சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தோ்வை 19 மையங்களில் 4149 மாணவ, மாணவிகள் எழுதினா்.
பள்ளி மாணவா்களின் இடைநிற்றலைத் தடுக்க அரசு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தலா 50 போ் தோ்வுசெய்யப்பட்டு, அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், சேலம், சங்ககிரி கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 19 தோ்வு மையங்களில் 4,149 போ் எழுதினா். இத்தோ்வு காலை 10 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெற்றது. இத்தோ்வு பணியில், 19 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 19 துறை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டனா்.