அரசிராமணி செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பேரூராட்சித் தலைவா் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள கணினியை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இப்பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், அரசிராமணி பேரூராட்சித் தலைவருமான காவேரி ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான கணினி மற்றும் தொடா்புடை உபகரணங்களை பள்ளிக்கு வழங்கி மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். பின்னா் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
இதில் பள்ளித் தலைமையாசிரியா் கண்ணன் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பொன்தனராஜ், ஆசிரியா்கள் விஜயபாரதி, சிந்தியா, பொன்பாரதி, ராஜேந்திரன், ஆனந்தகுமாா், வல்லரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.