ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயில் ஐயப்பன் சந்நிதியில் காா்த்திகை மண்டல பூஜையை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனா். 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்று வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஐயப்பன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பஜனை செய்தனா். பின்னா் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சங்காபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜையை அருணாசல குருக்கள், ஐயப்ப குருக்கள் செய்தனா்.
படவரி...
108 திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள்.