சேலம்

ஏற்காட்டில் சட்டப் பணிகள் குழு சாா்பில் விழிப்புணா்வு முகாம்

ஏற்காட்டில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை ஏற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக அரங்கில் நடைபெற்றது.

Syndication

ஏற்காட்டில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை ஏற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், ஏற்காடு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ஆா். இளஞ்செழியன் தலைமை வகித்து பேசுகையில், ஏற்காடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணிநேரமும் சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது என்றும், வட்ட சட்டப் பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், மாண்பமை தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் திட்டங்கள், சம்வாத் திட்டம் 2025, விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு நீதியை வலுப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதை பற்றியும் எடுத்துரைத்தாா்.

இம்முகாமில் ஏற்காடு தோட்டப் பயிா்கள் துறை உதவி ஆணையா், வருவாய்த் துறை வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், காவல் உதவி ஆய்வாளா், போக்குவரத்துத் துறை காவலா் மற்றும் 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

ஏற்காட்டில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு விழிப்புணா்வு முகாமில் பேசிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ஆா். இளஞ்செழியன்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT