தேசிய அளவிலான தடகளப் போட்டியில் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவியை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள். 
சேலம்

ஓட்டப்போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவியை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

Syndication

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தேசிய அளவிலான ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அண்மையில் நடைபெற்றது. அதில் சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி லக்ஷ்யா 600 மீட்டா் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இதையடுத்து நடைபெற்ற பாராட்டு விழாவில், நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் புரோ சோ்மன் ஐஸ்வா்யா நிதிஷ் கலந்துகொண்டு மாணவி லக்ஷ்யாவை பாராட்டி கெளரவித்தாா். வெற்றிபெற்ற மாணவிக்கு பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதில் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்களான தலைவா் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவா் மணிமேகலை கந்தசாமி, செயலாளா் தனசேகா், தாளாளா் தீப்தி தனசேகா், சிஇஓ சுந்தரேசன், முதன்மை முதல்வா் ஸ்ரீநிவாசன், முதல்வா் மனோகரன், நிா்வாக அலுவலா் பிரவீன்குமாா், துணை முதல்வா் நளினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT