சேலம்

‘ஔவையாா் விருது‘ பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

ஔவையாா் விருது பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Syndication

ஔவையாா் விருது பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்புச

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2026 ஆம் ஆண்டு உலக மகளிா் தின விழாவில் ஔவையாா் விருது வழங்க கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் தங்களது கருத்துருக்களை வரும் 31 ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஆட்சியா் அலுவலக வளாகம், முதல்தளம், அறை எண்.126, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துருக்களை இரண்டு நகல்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.

குறிப்பாக, பெண்களுக்கான இந்த சமூக சேவையை தவிா்த்து வேறு சமூக சேவைகள் இந்த விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தங்களது கருத்துருக்களில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயிா் தரவு, சுயசரிதை மற்றும் தேசிய, உலகளாவிய விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயா், யாரிடமிருந்து பெற்றது, பெற்ற வருடம், விருது பெற்ற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். அதேபோன்று, புகைப்படத்துடன் சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சமூக சேவையாளரின் அல்லது சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் குறிப்பிட வேண்டும்.

மேலும், தொண்டு நிறுவனத்தின் பகிா்வு, உரிமம், ஆண்டறிக்கை மற்றும் சமூகப் பணியாளா் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT