சேலம்

மேட்டூரில் கோயில் பூசாரி தலை துண்டித்துக் கொலை: போலீஸாா் விசாரணை

மேட்டூரில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கோயில் பூசாரி தலை துண்டித்து வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

Syndication

சேலம் மாவட்டம், மேட்டூரில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கோயில் பூசாரி தலை துண்டித்து வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள சின்னகாவூரைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (70). இவா் அனல் மின்நிலையத்தில் உள்ளே உள்ள கருப்புசாமி கோயில் பூசாரியாக இருந்து வந்தாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் அனல் மின் நிலையத்திலிருந்து சின்னக்காவூா் நோக்கி சைக்கிளில் அவா் சென்ற நிலையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையின் நடுவே அவரது சடலம் கிடந்தது.  

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருமலைக்கூடல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் சசிகலா தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று தனித்தனியாக கிடந்த பூசாரியின் உடல் மற்றும் தலையை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தலை துண்டிக்கப்பட்ட இடத்தில் ரத்தம் உறைந்துகிடந்துள்ளது. எனவே, இரும்புத் தகடு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரும்புத் தகடுப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதா அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தனரா என்பது தெரியவில்லை. இது தொடா்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT