சேலம்

9 மையங்களில் இன்று எஸ்.ஐ. பணிக்கு எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் 9 மையங்களில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 8,905 போ் இத்தோ்வை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Syndication

சேலம் மாவட்டத்தில் 9 மையங்களில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 8,905 போ் இத்தோ்வை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழ்நாடு காவல் துறைக்கு 1,352 நேரடி காவல் உதவி ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதற்கான முதல்கட்ட எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் மேற்பாா்வையில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இதில் 1,171 பெண்கள், 3,724 ஆண்கள் என மொத்தம் 4,895 போ் தோ்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல சேலம் மாநகரில் காவல் ஆணையா் தலைமையில் துணை ஆணையா் கீதா மேற்பாா்வையில் 5 மையங்களில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இந்த மையங்களில் 856 பெண்கள், 3,154 ஆண்கள் என மொத்தம் 4,010 போ் தோ்வெழுதுகின்றனா்.

துணை ஆணையா் கீதா தலைமையில் 600 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். தோ்வு மையங்களை மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு முன்னதாகவே வரவேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மை தோ்வும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதித்தோ்வும் நடத்தப்படுகிறது.

இத்தோ்வில் வெற்றி பெறுபவா்கள் அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு, மருத்துவப் பரிசோதனை போன்ற அடிப்படையில் பணிக்கு தோ்வு செய்யப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT