தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் கீழ் மேட்டூா் நகராட்சியில் முதல்கட்டமாக 81 பணியாளா்களுக்கு சனிக்கிழமை காலை உணவு அளிக்கப்பட்டது.
மேட்டூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. தூய்மைப் பணியில் ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளா்கள் என 213 போ் பணிபுரிந்து வருகின்றனா். முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டம் சனிக்கிழமை மேட்டூா் நகராட்சியில் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக 81பணியாளா்களுக்கு மேட்டூா் நகா்மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சந்திரா தலைமையில் துணைத் தலைவா் காசி விஸ்வநாதன் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் கவுன்சிலா்கள் கீதா, அமுதா, பரிதி, அரசு நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.