தம்மம்பட்டி சிவன், பெருமாள் கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயில் உண்டியலில் ரூ. 1,20,885, தம்மம்பட்டி ஸ்ரீ உக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உண்டியலில் ஆறு கிராம் தங்கம், 33 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ. 51,350 இருந்தது. இப்பணியின்போது, கோயில் தலைமை அறங்காவலா் சண்முகம், கோயில் அறங்காவலா்கள், செயல் அலுவலா், ஆய்வாளா், அா்ச்சகா்கள், முக்கியப் பிரமுகா்கள் உடன் இருந்தனா்.