ஆத்தூா் விநாயகபுரம் குடியிருப்பு பகுதி அருகே நல்லபாம்பை மீட்ட ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
ஆத்தூா் விநாயகபுரம் குடியிருப்பு பகுதியில் நல்லபாம்பு இருப்பதாக ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்துசென்று அப்பகுதியில் சிவக்குமாருக்கு சொந்தமான ஆலையில் இருந்த நல்லபாம்பை பிடித்து ஆத்தூா் வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.