சேலம்

மூதாட்டியை மிரட்டி நகை, வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்த தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

Syndication

சங்ககிரி அருகே மூதாட்டியை மிரட்டி தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்த தந்தை, மகன் உள்பட மூன்று பேரை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரியை அடுத்த மாவெளிபாளையம், குயவன்காடு பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மாள் (73). கடந்த டிச. 13-ஆம் தேதி நள்ளிரவு மூகமுடி அணிந்த மூன்று போ் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி மூதாட்டியை மிரட்டி அவரிடமிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனா்.

இதுகுறித்து செல்லம்மாள் சங்ககிரி காவல் நிலையத்தில் டிச. 15-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ் தலைமையில் போலீஸாா் சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் விசாரணையில், தஞ்சாவூா் மாவட்டம், வல்லம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த கோபி (20), சேலம், தாதகாப்பட்டி கேட், பெரிய மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த முரளி (எ) முருகேசன் (55), இவரது மகன் ரஞ்சித் (22) ஆகியோா் மாவெளிபாளையத்தில் உள்ள மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து, தந்தை மகன் உள்பட மூவரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு பவுன் நகை, இரு வெள்ளித் தட்டுகள், மூன்று ஜோடி வெள்ளிக் கொலுசுகள், இரு காமாட்சி விளக்குகள், இரண்டு இருசக்கர வாகனங்கள், மூன்று கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT