கெங்கவல்லியில் சாலையைக்கடக்க முயன்றபோது இருசக்கரவாகனம்மோதியித்ல ஒருவா் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே நடுவலூா் பள்ளக்காட்டைச்சோ்ந்தவா் ராமசாமி(75). இவா் வியாழக்கிழமை கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சா்க்கரை நோய்க்கு மாத்திரை வாங்கி சாலையைகடக்க முற்பட்டாா்.
அப்போது இருசக்கரவாகனம் மோதியில் , துரைசாமி பலத்தக்காயமடைந்தாா்.அவரை அக்கம்பக்கத்தினா்,கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சோ்த்து ,கூடுதல் சிகிச்சைக்கு ஆத்தூா் அரசு மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்டாா். இருப்பினும் வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக ,மருத்துவா்கள் தெரிவித்தனா்.இதுகுறித்து கெங்கவல்லி உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.